சேலம்

சங்ககிரியில் திமுக பொதுக்கூட்டம்

தினமணி

சங்ககிரி ஒன்றிய திமுக சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
 கூட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய திமுக பொறுப்பாளர் எஸ்.பி.நிர்மலா வரவேற்றார். திமுக துணைப் பொதுச் செயலர் வி.பி.துரைசாமி கூட்டத்தில் கலந்த கொண்டு 65 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பெண்களுக்கு சேலைகளை வழங்கிப் பேசினார்.
 மேற்கு மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம், மாவட்டத் தலைவர் கோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் கொங்கணாபுரம் சுப்பிரமணியம், ஒன்றிய இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் ஆர்.அருணாசலம், எடப்பாடி நகரச் செயலர் டி.எஸ்.எம்.பாஷா, இளம்பிள்ளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கமலக்கண்ணன், வழக்குரைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.என்.ராஜா, மணிகண்டன், குப்புசாமி, கொங்கு வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT