சேலம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொருளர் மல்லிகா தலைமை வகித்தார்.
 ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்ய வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முறைப்படுத்தி, நகர்ப்புறத்துக்கு விரிவுபடுத்த வேண்டும், பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 சங்ககிரியில்...
 சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளர் என்.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் கவுஹர், செல்வமணி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உதவி செயலர் ஐ.கீதா ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
 விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.ராமமூர்த்தி, சங்ககிரி விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டச் செயலர் மாணிக்கம், ஜனநாயக வாலிபர் சங்க வட்டச் செயலர் டி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

SCROLL FOR NEXT