சேலம்

பேருந்துகள் இயக்கம்: ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏற்காட்டுக்கு அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தினமணி

ஏற்காட்டுக்கு அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
 ஏற்காட்டில் 10- க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் வேலூர், நாகலூர், செம்மநத்தம், வெள்ளக்கடை, மஞ்சக்குட்டை, வாழவந்தி, மாரமங்கலம், தலைச்சோலை என எட்டு கிராமங்களுக்கு இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் மூலம் ஏற்காடு, மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், மின்வாரிய அலுவலகம், காய்கறிச் சந்தைகளுக்கு கிராம மக்கள் சென்று வந்தனர். பேருந்து வேலைநிறுத்தம் நடைபெற்றபோது இரண்டு நாள்களாக மலை கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் மலைகிராம மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையொட்டி புதன்கிழமை வழக்கம் போல் கிராம பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் சென்றதால் மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பேருந்துகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்த இருந்த நிலையில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் நாளை எஸ்ஐஆர் விவாதம்! ராகுல் தொடக்கி வைக்கிறார்!

போதிய ஆதாரம் இல்லை! நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர்!

புதுச்சேரி மக்கள் சந்திப்பு வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT