சேலம்

மலர்க் கண்காட்சிக்கு தயாராகும் ஏற்காடு!

DIN

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலாத்தலம் மலர்க் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது.
ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதி வாரத்தில் மலர்க் கண்காட்சி நடைபெறும். நிகழாண்டு மலர்க் கண்காட்சிக்காக தோட்டக்கலைத்துறை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிகளில் அண்ணா பூங்கா பகுதியில் டேலியா, ஆப்ரிக்க சாமந்தி, பிரெஞ்ச் சாமந்தி, சால்வியா, ஜெனியா, பிலாக்ஸ், பால்சம், கேலண்ர்லா, ரோஸ் போன்ற 30 ஆயிரம் மலர்களை தயார் செய்து வருகிறது.
கோடை விடுமுறை என்பதால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை புரிந்து வருகின்றனர். ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர்க் கண்காட்சி திடலில்  வைப்பதற்கு தயார் நிலையில் மலர்த் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொட்டிகளில் மலர்கள் மலர்ந்துள்ளதை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து புகைப்படங்கள்
எடுத்துச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT