சேலம்

சர்க்கரைசெட்டிப்பட்டியில் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

DIN

ஓமலூர் அருகேயுள்ள சர்க்கரைசெட்டிப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஓமலூர் அருகேயுள்ள சர்க்கரைசெட்டிப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் 500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆட்சிக் காலத்தில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதனால், கூடுதலாக மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். நடுநிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டடம், வகுப்பறைகள் இல்லாததால் வராண்டாவிலும், மரத்தடியிலும் அமர்ந்து மாணவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் கட்டக் கோரி பள்ளிக் குழந்தைகள், அப்பகுதி பொதுமக்கள், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் புதிய பள்ளிக் கட்டடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். பள்ளிக் கட்டடம் கட்ட இடம் கிடைக்காத நிலையில், கிராம மக்கள் ஒன்றிணைந்து விவசாய நிலங்களில் இருந்து சில பகுதிகளை விட்டுக் கொடுத்தனர்.இதனை தொடர்ந்து பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கிவைத்தார். சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் இந்த பள்ளிக் கட்டடம் கட்டபடுகிறது.இந்தப் பணிகளை மிகவும் தரமாகவும், விரைவாகவும் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ வெற்றிவேல் ஒப்பந்ததாரர்களிடம் கூறினார். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த விழாவில் அதிமுக ஒன்றியச் செயலர்கள் அசோகன், பச்சியப்பன், முன்னாள் தொகுதி செயலர் ராமச்சந்திரன்,முன்னாள் கவுன்சிலர் தங்கவேல்,கூட்டுறவு சங்கத் தலைவர்கள் தளபதி, ராஜேந்திரன், ராஜா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT