சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து 2,297 கன அடியாகச் சரிவு

DIN

காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 3,674 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை காலை நொடிக்கு 2,229 கன அடியாகச் சரிந்தது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக நொடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால், திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.08 அடியாகச் சரிந்தது.  அணையின் நீர் இருப்பு 47.20 டி.எம்.சி.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருவதால்,  நடப்பாண்டில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.  இதனால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT