மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகள் பேரணி
மோட்டார் வாகனப் பழுது பார்ப்போருக்கு பாதிப்பு ஏற்படாமல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.
மோட்டார் வாகனப் பழுது பார்ப்போருக்கு பாதிப்பு ஏற்படாமல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.
சேலம் மாவட்ட மோட்டார் பைக் மெக்கானிக்குகள் சங்கம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. கோட்டை மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி மாநகராட்சி அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முடிவடைந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தில் இருசக்கர வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட பணிமனையில் மட்டுமே பழுது பார்க்க வேண்டும் என்ற நிலை உள்ளதால் சிறுதொழில்போல் நடத்தி வரும் இருசக்கர வாகனங்களை பழுபார்க்கும் மெக்கானிக்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, தங்களது தொழிலைப் பாதிக்காத வகையில் மத்திய அரசு இச்சட்டத்தை திருத்தம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தப் பேரணியில், 100க்கும் மேற்பட்ட மெக்கானிக்குகள் கலந்துகொண்டனர்.