சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 31,236 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு,  சின்னாறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.  இதனால் புதன்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 19,225 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து,  வியாழக்கிழமை காலை நொடிக்கு 31,236 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 15 ஆயிரம் கன அடியிலிருந்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அணைக்கு வரும் நீரின் அளவைவிட,  பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால்,  புதன்கிழமை காலை 96.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  வியாழக்கிழமை காலை 97.30 அடியாக உயர்ந்தது.
ஒரே நாளில் மேட்டூர்அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 61.39 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT