சேலம்

ஏற்காட்டில் அரசுப் பேருந்தில் சிக்கிய மொபெட்: பயணிகள் உயிர் தப்பினர்

DIN

ஏற்காட்டில் அரசுப் பேருந்தில் மொபெட் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினர்.
ஏற்காடு மூளுவி கிராமத்திலிருந்து 34 பயணிகளுடன் ஏற்காட்டை நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. ராஜராஜேஸ்வரி கோயில் வளைவு அருகில் பேருந்து வந்தபோது, ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜாவிட் (22) மற்றும் விசூல் (23) ஆகியோர் இருசக்கர வானத்தில் சுற்றுலாப் பகுதியான சேர்வராயன் கோயிலுக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரில் அரசுப் பேருந்து வருவதைக் கண்டவுடன் அவர்கள் இருசக்கர வாகனத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருசக்கர வாகனம் தார்ச் சாலையில் 20 அடி தூரம் சருக்கி சென்று பேருந்தின் முன்சக்கரத்தில் மாட்டியது. இதனால் பேருந்து தடுப்பு சுவரை இடித்து நின்றது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்தச் சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT