சேலம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்

DIN

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நீட் தேர்வு முறையால் தமிழகத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், நீட் தேர்வு முறையை தமிழத்தில் இருந்து நீக்குவதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
மேலும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT