தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா
வாழப்பாடியில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் 35-ஆவது ஆண்டு விழா, மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, பணி நிறைவு பெற்ற
வாழப்பாடியில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் 35-ஆவது ஆண்டு விழா, மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
முப்பெரும் விழாவுக்கு, வட்டாரத் துணைத்தலைவர் சே.பெரியசாமி தலைமை வகித்தார். வட்டார செயலர் சி.முருகேசன் வரவேற்றார். மகளிரணி செயலர் கு.பாரதி உறுதிமொழி வாசித்தார்.
விழாவில், ஐபெட்டோ ஆசிரியர் இயக்கத்தின் அகில இந்திய செயலர் வா. அண்ணாமலை, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் நம்பிராஜ், மாநில பொதுச் செயலர் அ.வின்சென்ட் பால்ராஜ், மாநிலப் பொருளாளர் க.சந்திரசேகர் ஆகியோர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்று பணிநிறைவு பெற்ற அணைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மா. சித்தேஸ்வரன், தேக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் அ.பிரகாசம் ஆகியோருக்கு நினைவுப் பரிசை வழங்கி பாராட்டினர்.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் 35 வது ஆண்டு விழாவையொட்டி, ஐபெட்டோ ஆசிரியர் இயக்கத்தின் அகில இந்திய செயலர் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகளை பாராட்டி, முன்னாள் மாநில பொதுச் செயலர் கோ.முருகேசன் நினைவுப் பரிசு வழங்கினார்.
விழாவில், சேலம் மாவட்ட நிர்வாகிகள் உதயக்குமார், கோவிந்தராஜ், மதியழகன், செல்வம், ஷபீராபானு, வாழப்பாடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஐ.சுரேஷ், இலக்கியப் பேரவை செயலர் சிவ.எம்கோ, அரிமா சங்க பட்டயத் தலைவர் எம்.சந்திரசேகரன், ஆப்பிள் இளைஞர் கூட்டமைப்பு ஆலோசகர் ஜவஹர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக, வட்டார பொருளாளர் க.அமுதா நன்றி கூறினார்.