முகப்பு
சேலம்

பேருந்து மோதியதில் பெண் சாவு

பெத்தநாயக்கன்பாளையம் காந்திநகர் பகுதியில் சாலையைக் கடக்க  முயன்ற பெண் ஆம்னி பேருந்து மோதியதில்  உயிரிழந்தார். 

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:00 AM
பகிர்:

பெத்தநாயக்கன்பாளையம் காந்திநகர் பகுதியில் சாலையைக் கடக்க  முயன்ற பெண் ஆம்னி பேருந்து மோதியதில்  உயிரிழந்தார். 
பெத்தநாயக்கன்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனம்(35). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் - சென்னை தேசிய புறவழிச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.அப்போது சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் சரவணக்குமார் வழக்குப் பதிவு செய்து, ஆம்னி பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் (35) என்பவரை கைது செய்தார்.மேலும் உயிரிழந்த தனத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.