மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
வாழப்பாடி அருகே பிளஸ் 2 பயின்ற மாணவி மாயமானது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி அருகே பிளஸ் 2 பயின்ற மாணவி மாயமானது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன். இவரது 16 வயது மகள் மேட்டுப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்றார். தேர்வு முடிந்தையடுத்து கடந்த 6-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மாயமான தனது மகளைக் கண்டுபிடித்து தருமாறு, அவரது தாய் மணிமேகலை வாழப்பாடி போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை மீட்க விசாரணை நடத்தி வருகின்றனர்.