சேலம்

தமிழக விவசாயிகளின் பொறுமையை மத்திய அரசு சோதிக்க வேண்டாம்: ஜி.கே.வாசன்

DIN

தமிழக விவசாயிகளின் பொறுமையை மத்திய அரசு மேலும் சோதிக்க வேண்டாம் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, மேட்டூரில் திங்கள்கிழமை த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேட்டூர் அணை பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். முன்னதாக ஆர்ப்பாட்ட மேடைக்கு விவசாயிகளுடன் டிராக்டரில் வந்த  ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக விவசாயிகளின் பொறுமையை மத்திய அரசு மேலும் சோதிக்க வேண்டாம். காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். இதுதான் 5 கோடி தமிழக மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அதனை வஞ்சிக்க கூடிய நிலையை தேசியக் கட்சிகள் எடுத்துள்ளன. இதை முறியடிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு உள்ளது.
தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். கர்நாடக தேர்தல் அரசியலை நமது விவசாயிகளின் வாழ்வில் காட்டவேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட நிலையை அவர்கள் மீண்டும் எடுத்தால், தேசியக் கட்சிகளை தமிழகத்தில் 100 சதவீதம் மக்கள் புறக்கணிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். காவிரி நீர் பெற்றுத் தராத ஆளும்கட்சியை மக்கள் ஒதுக்கக் கூடிய சூழல் உருவாகும்.
வரும் கல்வி ஆண்டு முதல் பாடப் புத்தகங்கள் 20 சதவீதம் வரை விலை உயர்த்தப்படுவது ஏற்புடையதல்ல. இதனால், நடுத்தர குடும்பங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசு ஆடம்பர விழாக்களை குறைத்துக் கொண்டு பாடப் புத்தகங்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றார். 
இந்நிகழ்ச்சியில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கரு.வெ.சுசீந்திரகுமார், மாநில இணை செயலர் கே.பி.என்.மகேஸ்வர், மாநில மருத்துவர் அணி தலைவர் டாக்டர் ரகுநாதன், மாநில இளைஞரணி பொது செயலர் ரகுநந்தகுமார், கொளத்தூர் வட்டாரத் தலைவர் மனோகர், மாவட்ட பொது செயலர் எஸ்.எஸ்.மோகன், துணைத் தலைவர் நாகராஜ ரெட்டி, மாநில விவசாய அணி தலைவர் புலியூர்நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT