வாழப்பாடியில் மலர் மருத்துவமனை திறப்பு
வாழப்பாடியில் அதிநவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்ட மலர் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
வாழப்பாடியில் அதிநவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்ட மலர் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடியைச் சேர்ந்த மருத்துவர் ஆனந்த், அவரது மனைவி மகப்பேறு மருத்துவர் இந்துமதி ஆகியோர், வாழப்பாடி பருத்தி மண்டி அருகே, அதிநவீன மருத்துவப் பரிசோதனைக்கூடம், குளிரூட்டப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கம், ஸ்கேன், எக்ஸ்ரே வசதி, 60 படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுகளுடன், பொது மருத்துவம், குழந்தைகள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ சிறப்புப் பிரிவுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவமனையை அமைத்துள்ளனர்.
இந்த புதிய மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. விழாவில், மருத்துவர்கள் ஆனந்த், இந்துமதி வரவேற்றனர். மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் ஆனந்தின் பெற்றோர் பழனிசாமி, மலர்விழி மற்றும் மருத்துவர் இந்துமதியின் பெற்றோர், திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரலிங்கம், புவனேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி மருத்துவமனை பிரதான கட்டடங்களைத் திறந்து வைத்தனர்.
பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவா, சோமம்பட்டி மகேஸ்வரன், ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் முருகன், சோமம்பட்டி தொழிலதிபர் கண்ணன் மற்றும் மருத்துவர்கள், தொழிலதிபர்கள், உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.