முகப்பு
தமிழ்நாடு

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள்!

திமுக கூட்டணியில் கொமதேக-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி...

Updated On : 13 மார்ச் 2026, 1:54 pm IST
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தொகுதி பங்கீடு - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதயசூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடுகிறது.

Advertisement

Advertisement

சென்னை அண்ணா அறிவாயலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டார்.

summary

2 Constituencies for the Kongunadu Makkal Desiya Katchi in DMK Alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments