சேலம்

தோட்டக்கலை அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு: 135 பேர் எழுதினர்

DIN


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல்2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெற்றது.
இந்த மையத்தில் 145 தேர்வர்கள் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இத்தேர்வு விடியோ கேமரா மூலம் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டது.
மேலும், கண்காணிப்புப் பணியில் வருவாய்த்துறை அலுவலர்களும் பறக்கும் படை அலுவலர்களும் ஈடுபட்டிருந்தனர். இத்தேர்வை காலையில் 135 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 10 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT