சேலம்

செவிலியர் மரணம்: மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

DIN

செவிலியர் மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தி, சேலத்தில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த மணிமாலா, கடந்த பிப். 8-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலுக்குள்ளாகி மணிமாலா தற்கொலை செய்தார் என செவிலியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல அவரது மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என செவிலியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் அரசு மருத்துவமனை நுழைவாயில் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத் தலைவி சுதா தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட செவிலியர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு கேட்டு முழக்கங்களை
எழுப்பினர்.
மணிமாலாவின் மரணத்துக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தங்களுக்கு பணி பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று செவிலியர்கள் கோரிக்கை வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT