சேலம்

ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு கொங்கணாபுரம் அறக்கட்டளை நிதி வழங்கல்

DIN

சங்ககிரி அருகே உள்ள கொங்கணாபுரம் அறக்கட்ட ளையின் சார்பில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிதியாக ரூ.10 ஆயிரத்தை  அறக்கட்டளையின் நிர்வாகிகள் நாமக்கலில் உள்ள தமிழ்நாடு பொறுப்பாளரிடம் திங்கள்கிழமை வழங்கினர். 
கொங்கணாபுரம் அறக்கட்டளை சார்பில், அதன் நிறுவனர் ஆயிக்கவுண்டன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
அதனையடுத்து, நாமக்கல் காந்தி நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்நாடு பொறுப்பாளர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு மேலவை உறுப்பினர் எஸ்.முத்துசாமியிடம் ரூ.10 ஆயிரத்தை கொங்கணாபுரம் அறக்கட்டளை முன்னாள் சங்க முன்னாள் நிர்வாக அறங்காவலர்கள் கே.காசிராஜன், ஆ.மு.ஜெகநாதன், பொருளாளர் சி.மணி, நிர்வாக அறங்காவலர் எஸ்.மணிசங்கர், கொங்கணாபுரம் ஏஜிஎன் மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் கதிர் ஆகியோர் வழங்கினர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT