சேலம்

வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

தாரமங்கலத்தில் வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
தாரமங்கலம் வட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தபடுவதாக சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கவும், அரிசி கடத்தல் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஓமலூர் வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தாரமங்கலம் அருகேயுள்ள பொத்தியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. மேலும், இவர் பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்த ரேஷன் அரிசியை, வெளி மாநிலத்துக்கு கடத்திச் செல்ல, அவரது உறவினர் ஒருவர் வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தார்.
தகவல் அறிந்த ஓமலூர் வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 24 மூட்டைகளில் சுமார் 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், அவர்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். புகாரின் பேரில் தாரமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT