முகப்பு
சேலம்

குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

ஆத்தூரில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

ஆத்தூரில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் 31-ஆவது வார்டு வ.உ.சி. நகரில் கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் என்.கேசவன் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினர். குடிநீர் விநியோகிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் வாகனப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →