சேலம்

வாழப்பாடி அரசுப் பள்ளிகளில் பொங்கல் விழா

DIN

வாழப்பாடி பகுதியில் அரசுப் பள்ளிகளில் பொங்கல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை டி.ஜி. ரமா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அ. பழனிசாமி, பால் பண்ணை தொழிலதிபர் கோபால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரிய, ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பாரம்பரிய முறைப்படி மஞ்சள், கரும்பு தோரணம் கட்டி புதுப்பானையில் பொங்கல் வைத்து பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர்.
பேளூர் உருது துவக்கப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்குப் பள்ளி தலைமையாசிரியர் க. செல்வம் தலைமை வகித்தார். பாரம்பரிய ஆடை அணிந்து பொங்கல் சமைத்து கொண்டாடினர். பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பமீனா பானு ஆகியோர் பங்கேற்றனர்.
துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி மாட்டு தொழுவம் அமைத்து கறவைப் பசுவை அழைத்து வந்து அலங்கரித்து மாட்டுப் பொங்கல் வைத்து, ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ-மாணவியர் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT