முகப்பு
சேலம்

செங்காட்டில் வாய்க்கால் வெட்டி நீர்ப்பாசன வசதிகள் செய்து தரக் கோரிக்கை

தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட செங்காட்டில்  ஆயக்கட்டு விவசாய நிலங்களுக்கு வாய்க்கால் வெட்டி நீர்ப்பாசன

Updated On : 9 ஜூலை, 2018 at 9:18 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட செங்காட்டில்  ஆயக்கட்டு விவசாய நிலங்களுக்கு வாய்க்கால் வெட்டி நீர்ப்பாசன வசதி செய்து தரவேண்டி,  அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்காடு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. இப்பகுதியிலுள்ள ஆயக்கட்டு விவசாய நிலங்களுக்கு நாமக்கல் மாவட்டம் பெரப்பன்சோலை அணைக்கட்டிலிருந்து வாய்க்கால் வெட்டி நீர்ப்பாசனம்  செய்து தரப்பட்டு வருவதாக அரசிதழில் வெளியிடப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக 1984 ஆம் ஆண்டு முதல் 22 வருடங்களாக, அரசாணையின்பேரில் நீர்ப்பாசன மேம்பாட்டு வரி விவசாயிகளிடம் பெறப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை செங்காடு ஆயக்கட்டு விவசாய நிலம் 54.06 ஏக்கருக்கு,  வாய்க்கால்  வெட்டி நீர்ப்பாசனம் செய்து தரப்படுவதில்லை. ஆனால் வரி மட்டும், விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்டு
வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பெரியசாமி,  செங்கோடன் ஆகியோர் கூறியது, வருவாய்த் துறையும், பொதுப்பணித் துறையும் இணைந்து ஆய்வு செய்து,  செங்காடு கிராமத்தில் நீர்ப்பாசன மேம்பாட்டு வரி செலுத்தியுள்ள விவசாய நிலங்கள் 54.06 ஏக்கருக்கு வாய்க்கால் வெட்டி, நீர்ப்பாசன வசதி செய்து தரவேண்டும்.இதற்காக  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.