முகப்பு
சேலம்

டாஸ்மாக் கடையில் திருட்டு

தலைவாசலில் டாஸ்மாக் மதுபானக் கடையில் பூட்டை உடைத்து மதுப் புட்டிகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:20 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தலைவாசலில் டாஸ்மாக் மதுபானக் கடையில் பூட்டை உடைத்து மதுப் புட்டிகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தலைவாசல் ஏரிக்கரையில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. சனிக்கிழமை இரவு மதுபானக் கடையை பூட்டி விட்டு பணியாளர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை கடையைத் திறக்க வந்த  ஊழியர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் விரைந்து சென்று விசாரித்தார்.இதில், கடையின் பூட்டை உடைத்து மதுப் புட்டிகள் திருடப்பட்டது தெரியவந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.