சேலம்

மலைவாழ் குழந்தைகளுக்கு பாடம் நடத்திய ஆட்சியர்

தினமணி

ஏற்காடு வாழவந்தி கிராமம் உண்டு உறைவிடப் பள்ளியில் மலைவாழ் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தந்தார் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் .
 ஏற்காட்டில் வாழவந்தி உண்டு உறைவிடப் பள்ளியைப் பார்வையிட்ட ஆட்சியர், குழந்தைகளிடம் பாடப் புத்தகங்களை வாங்கி, பல் இல்லாத விலங்கினங்கள் எது என்று கேட்டார். அதற்கு குழந்தைகள், விலங்குகளுக்கு பல் உள்ளது என பதில் அளித்தனர். ஆனால் பாடப் புத்தகத்தில் நீரில் வாழும் விலங்கின் பெயரைக் கூறி, அதற்கு பல் இல்லை எனக் கூறினார். மேலும், பள்ளி ஆசிரியரிடம் குழந்தைகளுக்கு புத்தகத்தில் சிறப்பானதைப் புரியும்படி காற்றுக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். கொம்புத்தூக்கி உண்டு உறைவிடப் பள்ளியில் குழந்தைகளிடம் ஜானி ஜானி எஸ் பாப்பா பாடலில் டெல்லிங் லைஸ் என்னும் ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என கேட்ட பிறகு, குழந்தைகள் உண்மையைப் பேச வேண்டும் எனக் கூறினார். குழந்தைகளுக்கு கணினியைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுக்குமாறும், அது பிற்காலத்துக்கு அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

SCROLL FOR NEXT