சேலம்

விவசாயி கொலை வழக்கில்  7 பேருக்கு ஆயுள் தண்டனை

DIN

சேலத்தை அடுத்த தலைவாசலில் விவசாயி கொலை வழக்கில் 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தென்குமரை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (55). இவருக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதனிடையே,  அவருக்கும், பக்கத்துத் தோட்டக்காரரான மல்லிகேஸ்வரிக்கும் இடையே பொதுக் கிணறில் இருந்து தண்ணீர் எடுப்பதில் தகராறு இருந்து வந்தது. 
இதனிடையே,  வெங்கடாசலம், தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2015 அக்டோபர் 29 ஆம் தேதி இரவு வெங்கடாசலத்திற்கும், மல்லிகேஸ்வரிக்கும் இடையே தண்ணீர் எடுப்பது தொடர்பாகவும், சொட்டு நீர்ப் பாசனக் குழாயைச் சேதப்படுத்தியது தொடர்பாகவும் தகராறு ஏற்பட்டது. 
இதுதொடர்பான தகராறில் ஆத்திரமடைந்த மல்லிகேஸ்வரி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் (37), செந்தில்குமாரின் மனைவி கோமதி (28), மல்லிகேஸ்வரியின் மகள் சத்தியவாணி, சத்தியவாணியின் கணவர் யுவராஜ், செந்தில்குமாரின் மாமனார் மாணிக்கம், மாணிக்கத்தின் மனைவி தங்கம் ஆகியோர் வெங்கடாசலத்தை கடுமையாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம் இறந்தார்.
பின்னர்,  வெங்கடாசலத்தின் சடலத்தை கிணற்றில் வீசி விட்டு தப்பிச் சென்றனர். சடலத்தை மீட்ட தலைவாசல் காவல் துறையினர் மல்லிகேஸ்வரி  உள்பட 7 பேரை கைது செய்தனர். பின்னர் 7 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர் .
இந்த வழக்கு விசாரணை சேலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி எழில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மல்லிகேஸ்வரி, செந்தில்குமார், கோமதி, சத்தியவாணி, யுவராஜ், மாணிக்கம்,  தங்கம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் , தலா ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT