முகப்பு
சேலம்

வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக். பள்ளி மாணவரின் அறிவியல் படைப்புக்கு பரிசு

மாநில அறிவியல் விழாவில் வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா பள்ளி மாணவரின் அறிவியல் படைப்பு மூன்றாம் இடத்தை பெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

மாநில அறிவியல் விழாவில் வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா பள்ளி மாணவரின் அறிவியல் படைப்பு மூன்றாம் இடத்தை பெற்றது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் மாநில அளவில் 32 மாவட்டங்களிலிருந்து  மாணவர்களின் 453  அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தும் அறிவியல் பெருவிழா ,சென்னை பிர்லா கோளரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா பள்ளியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர் சி.கலைக்கோவன் காட்சிப்படுத்திய அறிவியல் படைப்பு மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றது. அதற்காக ,மாணவருக்கு அறிவியல் நகரக்குழுத் தலைவர் த.அறிவொளி,துணைத் தலைவர் சகாயம் ஆகியோர்  பரிசு, கேடயம் , சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர்.
பள்ளித் தலைவர் அருள்குமார், செயலர் தங்கவேல், பொருளாளர் முத்தம்மாள், கல்விக்குழு ஆலோசகர்கள் இளையப்பன்,  லஷ்மிநாராயணன், கூட்டுரோடு பழனிவேல் ,வெங்கடேசன் மற்றும் இயக்குநர்கள்,  முதல்வர் செல்வராஜன் ஆகியோர் விருதுபெற்ற மாணவர், உறுதுணையாக இருந்த ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →