கெங்கவல்லி ஆசிரியர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் 15 பேர் போட்டி
கெங்கவல்லியிலுள்ள ஆசிரியர் கூட்டுறவு சங்க இயக்குநர் தேர்தலில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
கெங்கவல்லியிலுள்ள ஆசிரியர் கூட்டுறவு சங்க இயக்குநர் தேர்தலில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்க சிக்கன நாணய சங்கத்தின் 7 இயக்குநர்கள் பதவிகளுக்கு போட்டியிட 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 18 பேரின் மனுக்களில், 3 பெண் ஆசிரியர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதியாக 15 பேர் போட்டியிடுவதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் 15 பேரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.