9 வயது சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
சேலம் எடப்பாடி அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கல் உடைக்கும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் எடப்பாடி அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கல் உடைக்கும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, கல் உடைக்கும் தொழிலாளி ஈஸ்வரன் (31) கடந்த 2012-இல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின்பேரில் பூலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆர். காந்திமதி ஆஜராகி வாதாடி வந்தார். விசாரணை முடிவுற்ற நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, குற்றம் சாட்டப்பட்ட ஈஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.