சேலம்

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி

DIN

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தப் பள்ளியில் 147 மாணவிகள் தேர்வு எழுதியதில் 146 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணக்குப் பதிவியல் பிரிவு மாணவி 1,104 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடத்தையும், கணிதம், உயிரியல் பிரிவு மாணவிகள் 1,075 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், அதே பிரிவில் மற்றொரு மாணவி 1,072 மதிப்பெண்கள் பெற்று 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். வணிகவியலில் ஒரு மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளார். 1000 மதிப்பெண்கள் மேல் 6 பேர் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர் என்.ராமசாமி, பெற்றோர்- ஆசிரியர் கழகத்தலைவர் ஆர்.செல்லப்பன், பொருளாளர் ஜி.நடராஜன் , பிடிஏ நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.
அரசு ஆண்கள் பள்ளி
93 சதவீதம் தேர்ச்சி:
சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 111 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 103 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலைப் பிரிவில் கணிப்பொறியியல் துறை மாணவர் 1,007 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடத்தையும், கணிதம், உயிரியல் துறை பிரிவு மாணவர் 988 மதிப்பெண்கள் பெற்று 2-ஆவது இடத்தையும், கணிப் பொறியியல் பிரிவு மாணவர் 985 மதிப்பெண்கள் பெற்று 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ரமணன், பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் என்எம்எஸ்.மணி, பிடிஏ நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT