ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 6,049 பேர் எழுதினர்
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 6,049 பேர் எழுதினர்.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 6,049 பேர் எழுதினர்.
சேலம் பாலபாரதி மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்ற மையத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 21 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை எழுதுவதற்காக 8,738 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 6,049 தேர்வு எழுதினர்.
தேர்வைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கண்காணிப்புக் குழு, தலைமைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைகளுக்குக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுபவர்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.