நட்டுவம்பாளையம் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம்
சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் நீதிதேவன் கூறியது:
நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 6-ஆம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 7-ஆம் வகுப்பும், நிகழாண்டு 8-ஆம் வகுப்பு தொடங்கப்பட்டு அதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப் பள்ளியில் யோகா, தியானம், கூட்டு உடற்பயிற்சி, சிலம்பம், விளையாட்டுப் பயிற்சி, நடனப் பயிற்சி, சதுரங்க மன்றம், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள், டிசிஎஸ் நிறுவனத்தால் கணினி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, ஏப்ரல் 25-ஆம் தேதி மாணவ, மாணவிகள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றார்.