முகப்பு
சேலம்

மே 24-இல் மின் நிறுத்தம்

மேட்டூர் ஆர்.எஸ்.துணை மின் நிலையத்தில் இம்மாதம் 24 ந்தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On : 22 மே, 2018 at 4:13 AM
பகிர்:

மேட்டூர் ஆர்.எஸ்.துணை மின் நிலையத்தில் இம்மாதம் 24 ந்தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மேட்டூர் ஆர்.எஸ் துணை மின்நிலையத்தில் இம்மாதம் 24-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த துணை மின்நிலையத்துக்குள்பட்ட மேட்டூர் ஆர்.எஸ், கருமலைக்கூடல், புதுச்சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூளையூர், ஆண்டிக்கரை, குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிபட்டிணம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர் மற்றும் தாழையூர் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.