சேலம்

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

DIN


மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் கால்வாய் பாசனப் பகுதிகளில் மழையின் காரணமாக நீர் திறப்பு சனிக்கிழமை காலை நொடிக்கு 100 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.77 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 4,625 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 65.84 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT