சேலம்

பாரம்பரிய இன கோழிகள் விற்பனை

DIN

வாழப்பாடி பகுதி கிராமங்களில்,  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் முகாமிட்டு,   பாரம்பரிய இன கருங்கோழி, கினிகோழி,  வான்கோழி மற்றும் வாத்துக் குஞ்சுகளை விற்பனை செய்து வருகின்றனர். 
தமிழகத்தையொட்டியுள்ள ஆந்திர மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் நவீன முறையில் அடைக்காக்கும் பெட்டிகளில் பாரம்பரிய இன கருங்கோழி, கினிகோழி, வான்கோழி மற்றும் வாத்துக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவற்றைக் கொள்முதல் செய்து கொண்டு வரும்,  தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சிறு வியாபாரிகள், வாழப்பாடி பகுதியில் முகாமிட்டு கிராமங்கள்தோறும் சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஒரு ஜோடி பாரம்பரிய இன கோழிக் குஞ்சுகள் ரூ. 200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT