சேலம்

ஆணைக்காடு கிராமத்தில்  சிறப்பு மனுநீதி முகாம்

DIN

ஏற்காடு வெள்ளக்கடை ஊராட்சி ஆணைக்காடு கிராமத்தில்  வருவாய்த் துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமை வகித்தார்.  வட்டாட்சியர் சுமதி வரவேற்றார். ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சித்ரா, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் காமராஜ் ,தேர்தல் துணை வட்டாட்சியர் தேவி, மண்டல துணை வட்டாட்சியர் ராஜமாணிக்கம்  முன்னிலை வகித்தனர். 
வருவாய்த் துறை ,தோட்டக்கலைத் துறை,வேளாண்மைத் துறை,கால்நடைத் துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இவற்றில் வருவாய்த் துறையில் 10 பேருக்கு ஸ்மாட் கார்டுகளும்,  இயற்கை மரணம் அடைந்த 4 பேருக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.20 ஆயிரம் வீதமும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து 25 மனுக்கள் பெறப்பட்டன.   பொதுமக்கள் பலர் மனுநீதி முகாமில் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT