சேலம்

மறைந்த முன்னாள் அமைச்சருக்கு எதிரான நில மோசடி வழக்கு ரத்து

DIN

திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் அவரது மகன் ராஜா உள்ளிட்ட 16 பேருக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சேலம், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த நகைக்கடை அதிபரான பிரேம்நாத்தின் நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா, பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது வீரபாண்டி ஆறுமுகம் இறந்துவிட்டார். இந்த வழக்கில் எஞ்சியிருந்தவர்கள் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ -க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.ராஜா, பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இந்த வழக்கின் புகார்தாரர் மற்றும் அவரது சகோதரருடன் சமரசம் செய்து கொண்டோம். எனவே, எங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். 
இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வீரபாண்டி ஏ.ராஜா, பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது சென்னை சிறப்பு  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில மோசடி வழக்கு ரத்து செய்யப்படுகிறது. சென்னை, திரிசூலத்தில் இயங்கி வரும் மனசு என்ற மனநல காப்பகத்துக்கு, வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ள இந்த 15 பேர் சார்பில், ரூ.25 ஆயிரம் நன்கொடையை இரண்டு வார காலத்துக்குள் வழங்க வேண்டும். அந்தத் தொகையைச் செலுத்தியதற்கான ரசீதை, நீதிமன்றப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு நன்கொடை செலுத்தத் தவறினால், வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு, தானாகவே ரத்தாகி விடும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT