சேலம்

மழை வேண்டி கஞ்சிக் கலயம் சுமந்த பக்தர்கள்

DIN

உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் விரதமிருந்த பக்தர்கள் கஞ்சிக் கலயம் சுமந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
 எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டில வலசு பகுதியில், ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் இயங்கி வருகிறது. இந்த ஆன்மிக மையத்தின் தலைவர் துரைசாமி தலைமையில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக செவ்வாடை அணிந்து விரதமிருந்து வருகின்றனர்.
 அவர்கள் திங்கள்கிழமை வெள்ளாண்டில வலசு பகுதியில் உள்ள காளியம்மன் ஆலயத்திலிருந்து கஞ்சிக் கலயங்களுடன் ஊர்வலமாக வந்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நிறைவடைந்தது.
 அங்கு பக்தர்கள் சுமந்து வந்த கஞ்சிஅம்மனுக்கு படைக்கப்பட்டு, பிரசாதமாக வழங்கப்பட்டது.
 இதில் கலந்துகொண்ட பக்தர்கள், உலக மக்கள் அனைவரும் நன்மை பெறவும், உலக அமைதி நிலைத்திடவும், மாநிலத்தில் போதிய மழைப் பொழிவு வேண்டியும் விரதமிருந்து கஞ்சிக் கலயம் சுமந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தியதாக கூறினர். நிகழ்ச்சியில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT