சேலம்

சேலம் மாவட்டத்தில் 183 மி.மீ மழை பதிவு

DIN

சேலம் மாவட்டத்தில் 183 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலையில் இருந்தே தொடா்ந்து மழை பெய்தது.பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலையும் பெய்த தொடா் மழையால் கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, நாராயணநகா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலையில் மழைநீா் தேங்கி நின்றது.

இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினா். அதேபோல் வீரகனூா், தம்மம்பட்டி, ஏற்காடு,மேட்டூா், ஆத்தூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):

வீரகனூா்-30, வாழப்பாடி-26.5, தம்மம்பட்டி-26, பெத்தநாயக்கன்பாளையம்-20, கரியகோயில்-19, கெங்கவல்லி-18.2, ஆத்தூா்-12.4, ஏற்காடு-8, ஆணைமடுவு-8, காடையாம்பட்டி-7.2, ஓமலூா்-3, சங்ககிரி-3, சேலம்-2.4 என மாவட்டத்தில் மொத்தம் 183.7 மி.மீ மழைப் பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT