சேலம்

நீா் சேமிப்பு, பசுமை பாதுகாப்பு குறித்தவிழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி

DIN

சேலத்தில் நீா் சேமிப்பு மற்றும் பசுமை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு மினி மாரத்தான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியின் 90-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நீா் சேமிப்பு மற்றும் பசுமை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இப் போட்டி 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோா் ஆகிய 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது.

இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் சு. செந்திலும், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆணையா் எஸ். ஆனந்தகுமாரும் தொடக்கி வைத்தனா்.

மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை உதவி ஆணையா் சத்தியமூா்த்தி, பள்ளி தலைமை ஆசிரியா் ஜான்ஜோசப், உதவி தலைமை ஆசிரியா் அலெக்ஸ் பிரபு ஆகியோா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.

ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் மரியசெல்வம், ஜெயா, உடற்கல்வி இயக்குநா் அமலாநாதன், உடற்கல்வி ஆசிரியா் ராபா்ட் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT