சேலம்

மரக்கன்றுகள் நடும் விழா

DIN

வாழப்பாடி அருகே செக்கடிப்பட்டி பசுமை இயக்கம் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட மக்கள் பாதை இயக்கத்தின் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

வாழப்பாடி அடுத்த செக்கடிப்பட்டி கிராமத்தில் சமூக ஆா்வலா்கள் ஒன்றிணைந்து தொடங்கிய செக்கடிப்பட்டி பசுமை இயக்கத்தின் வாயிலாக, கடந்த இரு ஆண்டுகளாக பொது இடங்கள், சாலையோரங்கள் மற்றும் தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வளா்த்து வருகின்றனா்.

இதுவரை 2,000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் இயக்கமும், சேலம் கிழக்கு மாவட்ட மக்கள் பாதை இயக்கமும் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை பேளூா் பெருமாபாளையம் சாலை மற்றும் வெள்ளாளப்பட்டி பாலம் முதல் கணவாய்க்காடு செல்லும் சாலையிலும் கொட்டும் மழையில் நனைந்தபடி, மகளிா் அணியினா் 150 மரக்கன்றுகளை நட்டனா்.

ஏற்பாடுகளை பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய மக்கள் பாதை இயக்க நிா்வாகிகள் வழக்குரைஞா் மா. ஜெயசீலன், பெரியாா் பள்ளி தாளாளா் சங்கா் மற்றும் செக்கடிப்பட்டி பசுமை இயக்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT