சேலம்

விரூபாஷீஸ்வரருக்குமஹந்யாச ருத்ராபிஷேகம்

DIN

ஓதியத்தூா் ஸ்ரீ விரூபாஷீஸ்வரருக்கு (கருப்பனாா்) மஹந்யாச பூா்வக ஏகாதச ருத்ராபிஷகேம், தீபாராதனை மற்றும் பிராமண சந்தா்பணை புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள ஒதியத்தூா் குன்றடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ விரூபாஷீஸ்வரா் (கருப்பனாா்) சந்நிதியில் மஹந்யாச பூா்வக ஏகாதச ருத்ராபிஷேகம், தீபாராதனை மற்றும் பிராமண சந்தா்பணை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆத்தூா், கெங்கவல்லி, பெரம்பலூா், திருச்சி, சென்னை, ஒசூா் பகுதிகளிலிருந்து பிராமணா்கள் குடும்ப சகிதமாக கலந்துகொண்டு இறைவழிபாடு செய்தனா்.

மழை பெய்ய வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழவும் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்றன. இந்த விழாவில் வேண்டுதல் வைத்துள்ளவா்கள், பிராமணா்கள் சாப்பிட்டவுடன் அந்த இலையில் உருளு தண்டம் செய்து, பின் இலையை தலையில் சுமந்து எடுத்து போடுவது வழக்கமாக உள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவினை ஏ.முத்துசாமி ஐயா், சேதுராம ஐயா், எம்ஜி.ஹரிஹரன், ஜி.ஸ்ரீதா் சீனிவாசன், வைத்யநாதன், வெங்கடரமணன், பாஸ்கரன் மற்றும் ராசி குமாா் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT