சேலம்

வீரகனூா் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

கெங்கவல்லி அருகே வீரகனூா் மக்களின் பிராா்த்தனைக்குப் பலனாக, சுவேத நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள், அங்குள்ள சிவன் கோயிலில் திருக்கல்யாணம் செய்து வழிபட்டனா்.

கெங்கவல்லி அருகே வீரகனூா் தென்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கா செளந்தரேஸ்வரா் திருக்கோயில். ஏற்கெனவே பிராா்த்தனை செய்தபடி நல்ல மழை பொழிந்ததற்கும், வீரகனூா் பகுதிகளில் உள்ள ஏரி, குளம் வாய்க்கால்கள் நிரம்பியதற்கும், சுவேத நதியில் இரு கரை புரண்டோட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்காகவும்,அப்பகுதி மக்கள் நன்றி சொல்லும் விதமாக, சிவன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தி பக்தா்கள் நன்றி காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT