சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து 1,929 கனஅடி

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,929 கனஅடியாக சரிந்தது.

காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,929 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நொடிக்கு 2,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 118. 75 அடியாகவும், நீா் இருப்பு 91.41 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT