முகப்பு
சேலம்

கடம்பூர் அரசுப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா ஆத்தூர் கோட்டாட்சியர்

Updated On : 13 பிப்ரவரி 2019, 10:19 am IST
பகிர்:

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர் அந்தோணிமுத்து முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் என்.டி.செல்வம் வரவேற்றார்.
பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஊர்பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான பொருள்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர். கல்விச் சீர் விழாவில் வழங்கப்பட்ட புரொஜெக்டர் மூலம் காணொலிக் காட்சியை ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன் தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். விழாவில், ஆசிரியர் பயிற்றுநர்கள் பாலமுருகன், செல்வராஜ், சுப்பிரமணி, சுப்பிரமணியன் வறுமை ஒழிப்பு சங்கத்தின் கங்காதேவி, ஜீவிதா, லதா பள்ளி மேலாண்மைக் குழு ஜெயந்தி மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். மீனாம்பிகா செல்வம் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.