FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!

ஐபிஎல் தொடரில் அதிக முறை 50-க்கும் அதிகமாக ரன்கள் குவித்து ரோஹித் சர்மாவின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

கே.எல்.ராகுல் - படம் | தில்லி கேபிடல்ஸ் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரில் அதிக முறை 50-க்கும் அதிகமாக ரன்கள் குவித்து ரோஹித் சர்மாவின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

Advertisement

Advertisement

ரோஹித் சர்மாவின் சாதனை சமன்!

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 60 ரன்கள் எடுத்தன் மூலம், ஐபிஎல் தொடரில் 51 முறை 50-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ள ரோஹித் சர்மாவின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக முறை 50-க்கும் அதிகமான ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 76 முறை 50 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் குவித்தவர்கள்

விராட் கோலி - 76 முறை

டேவிட் வார்னர் - 66 முறை

ஷிகர் தவான் - 53 முறை

கே.எல்.ராகுல் - 51 முறை

ரோஹித் சர்மா - 51 முறை

summary

K.L. Rahul has equaled Rohit Sharma's record in the IPL by scoring 50-plus runs on the most occasions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments