சேலம்

அரசுப் பேருந்து மோதி தம்பதி சாவு

DIN

சங்ககிரியை அடுத்த ஆலத்தூர்ரெட்டிபாளையம் அருகே காசிகாட்டில் அரசு நகரப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி கிடையூர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவரது மனைவி வீரம்மாள் (45). இருவரும் தேவூர் அருகே ஓடசக்கரை பகுதியில் அவர்களது உறவினர் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்க இரு சக்கர வாகனத்தில் சென்றபோது காசிகாடு என்ற பகுதியில் தேவூரிலிருந்து சங்ககிரி நோக்கி வந்த அரசு நகரப் பேருந்து அவர்கள் மீது மோதியதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுக்கு  இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 
இதுகுறித்து தேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT