குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிப்பு
நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
ஆத்தூரில் வார்டு எண் 5-இல் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத மூன்று இணைப்புகளை துண்டிக்க நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது:
நிலுவைக் கட்டணங்கள் ரூ.63ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. மேலும், அனுமதியற்ற ஐந்து குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றார்.