சந்தனமரம் வெட்டிய இருவருக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம்
கல்வராயன்மலை பெரிஞ்சூர் கிராமத்தில் சந்தனமரம் வெட்டிய இருவருக்கு மாவட்ட வன அலுவலர் ஏ. பெரியசாமி மொத்தம் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தார்.
கல்வராயன்மலை பெரிஞ்சூர் கிராமத்தில் சந்தனமரம் வெட்டிய இருவருக்கு மாவட்ட வன அலுவலர் ஏ. பெரியசாமி மொத்தம் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தார்.
கல்வராயன்மலைக் கிராமங்களான பெரிஞ்சூர் கிராமத்தில் மாவட்ட வன அலுவலர் ஏ. பெரியசாமி உத்தரவின்பேரில் கல்வராயன் வனச் சரகர் எஸ். ஞானராஜ், வனவர் ஜி. பாஸ்கர், வனக் காப்பாளர்கள் மற்றும் வனக் காவலர்கள் குழுவாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோயில் புறம்போக்கு இடத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டி எடுத்து வந்த கருமந்துறையைச் சேர்ந்த ஆறுமுகம் (42), குப்பன் (55) ஆகிய இருவரையும் பிடித்து வழக்குப் பதிவு செய்து மாவட்ட வன அலுவலரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் விசாரித்த மாவட்ட வன அலுவலர் ஏ.பெரியசாமி, சந்தனமரத்தை வெட்டிய இருவருக்கும் தலா ரூ. 30 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரம் அபராதமாக விதித்தார்.