சேலம்

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு

DIN

சேலத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக  வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
சேலம் மாநகராட்சி  5-ஆவது  கோட்டம் பெரியபுதூர் பகுதியில் மின் கம்பம் ஒன்று போக்குவரத்துக்கும்,  பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது.  மேலும் அங்குள்ள போயர் தெரு பகுதியில் குறைந்த அளவு மின்சாரம் செல்லக்கூடிய ஒருமுனை மின்சார இணைப்பு  மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதனை சரிசெய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சொர்ணபுரியில் உள்ள மின்சார அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவலறிந்து அழகாபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம்
கைவிடப்பட்டது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாநகரச் செயலர் கதிர்வேல், பொருளாளர் வெங்கடேசன் உள்பட 17  பேர் மீது அழகாபுரம் போலீஸார் சட்டவிரோதமாகக் கூடியது உள்பட இரு பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT